சென்னை:இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.
தற்போது 'ஹார்ட் பீட்' என்ற இணையத் தொடரை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இந்த சீரிஸ்ஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரிஸ்க்கு சரண் ராகவன் இசையமைக்கிறார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளைச் செய்கிறார். மேலும் சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்த பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
'ஹார்ட் பீட்' சீரிஸ் ரசிகர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோக லட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.