சென்னை: இயக்குநர் ஹரி, தமிழ் சினிமாவில் வேகமான திரைக்கதை கொண்ட திரைப்படம் எடுப்பதில் பெயர் பெற்றவர். இவரது படங்கள் எல்லாமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். ஆறு, வேல், சிங்கம் என இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய ஹிட் படங்களில் நடித்த விஷால், மீண்டும் அவருடன் இணைந்து நடித்து வரும் படம் ரத்னம். இப்படத்தை ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரித்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஷால் படத்திற்கு முதல் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப் போன்று இப்படமும் ஆக்ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.