ஹைதராபாத்:ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பின் வெளியாகியுள்ள விஜய் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், இன்று கோட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கோட் படத்தை பார்க்க தூண்டும் 5 காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இரட்டை வேடத்தில் கலக்கும் விஜய்: நடிகர் விஜய் ’கோட்’ படத்தில் இரட்டை வேடத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் கலக்கியுள்ளார். தந்தை, மகன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி மூன்றாவதாக ஒரு கதாபாத்திரத்தில் கூட விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் முன்னதாக 2007இல் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
அசரடிக்கும் ஆக்ஷன் காட்சிகள், சர்வதேச தரத்தில் கிராஃபிக்ஸ்: கோட் படத்தில் de-ageing தொழில்நுட்பம் மூலம் ஆக்ஷன் காட்சிகள் இரண்டாவது விஜய் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சிறு வயது விஜய் ஆகும். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைப்படங்களான அவதார் மற்றும் அவெஞ்சர்ஸ் ஆகிய படங்களுக்கு கிராஃபிக்ஸ் செய்த லோலா விஃபெக்ஸ் நிறுவனம் கோட் பட கிராஃபிக்ஸ் பணிகளை செய்துள்ளது. கோட் படத்தில் ஆடியன்ஸை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு கிராஃபிக்ஸ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை: ’கோட்’ ஆக்ஷன் கலந்த சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. கதைப்படி விஜய்யின் மகன் அவருக்கு எதிராக மாறுகிறார் என கூறப்படுகிறது. இந்த ஒன்லைன் கதையில் மேலும் விறுவிறுப்பை கூட்டுகிறது.