திருவனந்தபுரம்:மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர் ரஞ்சித். இவர் இன்று கேரளா சாலசித்ரா அகாடமி சேர்மன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா ரஞ்சித் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை வைத்தார்.
அதில், "நான் படப்பிடிப்பு சம்பந்தமாக கொச்சிக்கு சென்றேன். அப்போது ரஞ்சித் படம் சம்பந்தமாக பேச வேண்டும் என தனி அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அங்கே அவர் என்னை பாலியல் ரிதியாக துன்புறுத்தல் செய்தார்” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றசாட்டுக்கு ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நடிகை என்னுடைய படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை. அதனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை. மற்றபடி, அவர் கூறுவது போல் நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை" என தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகையின் குற்றச்சாட்டிற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று தனது பதவியை ரஞ்சித் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், நேற்று மற்றொரு நடிகை, நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார்.
இதற்கும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் சித்திக், தான் வகிக்கும் திரைப்பட கலைஞர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், ராஜினாமா கடிதத்தை அமைப்பின் (A.M.M.A) தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பியதாக கூறினார். அந்த கடிதத்தில், என் மீது குற்றசாட்டுகள் இருந்ததால் பதவியில் நீடிக்க வேண்டாம் என முடிவு செய்து ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:கோட் படத்தில் AI விஜயகாந்த் இருப்பது உறுதி.. அடித்துச் சொல்லிய பிரேமலதா! - vijayakanth AI IN THE GOAT