சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
இதில், முதல்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் வரையிலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அரசியல் பிரமுகர்களும் தங்களது வாக்கினைச் செலுத்தினர். அந்த வகையில், இன்று காலை முதலே திரைப் பிரபலங்களும் தங்களது வாக்கினைச் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இதன்படி, பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சென்னையிலும், ஒரு சிலர் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் தங்களது வாக்கினைச் செலுத்தினர். இவர்களில், நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், தான் மனவேதனை அடைந்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், அஜித்குமார், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், வடிவேலு, பிரபு, கார்த்திக், பிரசாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், ஜெயம் ரவி, சசிகுமார், சுந்தர்.சி, அருண் விஜய், பரத், ஆர்யா, ஹரிஷ் கல்யாண் மற்றும் கருணாகரன் ஆகியோர் தங்களது வாக்கினை, அந்தந்த வாக்குச்சாவடிகளில் செலுத்தினர்.
அதேபோல், ஜெயசித்ரா, குஷ்பு, த்ரிஷா, வரலட்சுமி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய நடிகைகளும் தங்களது வாக்கினைச் செலுத்தினர். மேலும், டி.ராஜேந்தர், வெற்றிமாறன், லிங்குசாமி, சுசி கணேசன், அமீர், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய இயக்குநர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் தங்களது வாக்கினைச் செலுத்தினர். அதேநேரம், சிலம்பரசன், விஜயகுமார், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், எஸ்ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் தங்களது வாக்கினைச் செலுத்தவில்லை.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தேர்தலில் வாக்களித்த அரசியல் பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு! - Lok Sabha Election 2024