தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆடையில்லாத புகைப்படத்தை வெளியிட்டாரா நடிகை சமந்தா? - SAMANTHA RUTH PRABHU VIRAL POST - SAMANTHA RUTH PRABHU VIRAL POST

Actress Samantha: நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு டெலிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா புகைப்படம்
நடிகை சமந்தா புகைப்படம் (credit to ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 9:00 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நான் ஈ, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சமந்தா. இவர் கடந்த ஏப்.28ஆம் தேதி தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தேதியில் தனது புதிய படத்தின் அப்டேட் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், இன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் ஒன்று நோயிலிருந்து குணமாவதற்கான சிகிச்சை குறித்த புகைப்படமும், குளியல் தொட்டியில் இருந்தவாறான புகைப்படத்தையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், 2வது புகைப்படத்தை அவர் உடனடியாக டெலிட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்த சில நிமிடங்களில் நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக ஆரம்பித்து விட்டார். முன்னதாக, “நடிகை சமந்தா இது போன்ற செயல்களில் ஈடுபட்டதே இல்லை. தற்போது சமந்தாவிற்கு என்ன ஆனது?” என ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நடிகை சமந்தா இந்த புகைப்படங்களை பதிவிட்டு டெலிட் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் எனவும், இதை சமந்தா பதிவிடவில்லை, ஒவ்வொரு பதிவிற்கு அவரது தலைப்பு மற்றும் எமோஜ்களை பதிவிடுவார் எனவும், யாரோ ஒருவர் எடிட் செய்து வேண்டுமென்றே வைரலாக்குவதாக பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக சமந்தா தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் அஷ்வத் காம்போ... டிராகன் படத்தின் புதிய அப்டேட்! - Dragon Title Teaser Released

ABOUT THE AUTHOR

...view details