தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“எவ்வளவு பெரிய ஃப்ராடு என்பது ஊருக்கே தெரியும்..” ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பதிவு! - Sri reddy

Actress Sri reddy: ஹேமா கமிட்டி அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டியின் சமூக வலைத்தளப் பதிவு பேசு பொருளாகியுள்ளது.

ஸ்ரீரெட்டி புகைப்படம்
ஸ்ரீரெட்டி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 7:51 PM IST

சென்னை:ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரைத்துறையில் புயலை கிளப்பியுள்ள நிலையில், மலையாள நடிகர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், இன்று விஷால் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அவர் உணவளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "சினிமாவில் நடிகைகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்" என கூறினார். இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீரெட்டி உங்கள் மீது புகார் அளித்துள்ளது குறித்து கேட்டதற்கு, "ஸ்ரீரெட்டி யாரென்று கூட எனக்கு தெரியாது எனவும், அவர்கள் செய்த சேட்டை தான் எனக்கு தெரியும்" என்றார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், “தாங்கள் ஒரு பெண்னை பற்றி ஊடகத்தின் முன் பேசும் போது நாவடக்கம் தேவை, கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணைக் குறித்து உபயோகப்படுத்தும் தவறான வார்த்தைகள், உங்கள் நடுங்கும் விதம், நல்லவருக்கு உங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து அனைவரும் அறிவர். நீங்கள் எவ்வளவு பெரிய ஃப்ராடு என்று ஊருக்கே தெரியும்.

நீங்கள் ஊடகத்திற்கு முன் பேசிவிட்டால் மரியாதைக்குரிய நபர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் விட்டுச் சென்றதற்கான காரணம் என்ன? உங்கள் நிச்சயதார்த்தம் நின்றதற்கு காரணம் என்ன? அடுத்த முறை இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். நல்ல பொறுப்பில் இருப்பது முக்கியமல்ல, மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். இந்த பதிவு பல்வேறு கேள்விகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நீண்ட நாள் கனவு பலித்தது.. விடுதலை 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு! - viduthalai 2 release date

ABOUT THE AUTHOR

...view details