தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'அமரன்' படத்தில் மெகா ஹிட்டான பாடல்கள்... சிவகார்த்திகேயன் செயலால் மகிழ்ந்த ஜிவி பிரகாஷ்! - SIVAKARTHIKEYAN GIFT TO GV PRAKASH

Sivakarthikeyan gift to GV Prakash: அமரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் பாராட்டை பெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு வாட்ச் ஒன்று பரிசு வழங்கியுள்ளார்.

ஜிவி பிரகாஷிற்கு வாட்ச் பரிசளித்த சிவகார்த்திகேயன்
ஜிவி பிரகாஷிற்கு வாட்ச் பரிசளித்த சிவகார்த்திகேயன் (Credits - @gvprakash X Account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 11:32 AM IST

சென்னை: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் 'அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 200 கோடியைக் கடந்து வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அமரன் அதிகபட்ச வசூல் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் வெற்றிக்கு ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஹே மின்னலே, வெண்ணிலவு சாரல், உயிரே ஆகிய பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் இப்பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னணி இசையும் படத்தின் அழுத்தத்தை பல மடங்கு கூட்டியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ”இந்திய அளவில் சிறந்த நடிகரை இயக்குகிறேன்”... தனுஷ் படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி!

இந்த தீபாவளிக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான அமரன் மற்றும் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஜிவி பிரகாஷ் குமார் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் அமரன் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள சிவகார்த்திகேயன் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details