தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சென்னையில் கனவு அலுவலகம் கட்டிய நயன்தாரா.. புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி! - Nayantara New Office - NAYANTARA NEW OFFICE

Nayanthara: நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்கியதாக கூறப்படும் நிலையில், அந்த வீட்டின் மொட்டை மாடியில் தற்போது அவர் ஒரு அலுவலகத்தை கட்டி முடித்துள்ளார்.

NAYANTARA NEW OFFICE
NAYANTARA NEW OFFICE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 12:07 PM IST

சென்னை:நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

அண்மையில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி, நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது மாதவனுடன் 'தி டெஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் மே மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல், சசிகுமாருடன் ஒரு படம் உள்பட இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. படங்கள் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் '9 ஸ்கின்' (9 SKIN) என்ற பெயரில் அழகு சாதனப் பொருள்களும், 'பெமி 9' (Femi9) என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் பிராண்ட் தொழிலை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும், கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து 'தி ரவுடி பிக்சர்ஸ்'(Rowdy Pictures) என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இது மட்டுமல்லாது, ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஒரு வீட்டை அவர் வாங்கியதாக கூறப்படும் நிலையில், அந்த வீட்டின் மொட்டை மாடியில் தற்போது ஒரு அலுவலகத்தை கட்டி முடித்துள்ளதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகத்தைக் கட்டி முடித்ததால் தனது கனவு நனவாகியதாகவும், புதிய ஆரம்பம் தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் நயன்தாரா கூறியுள்ளார். மேலும், தனது கனவு அலுவலகத்தை வெறும் 30 நாட்களில் நனவாக்கிய குழுவினருக்கு எனது நன்றிகள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகம் குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில், அந்த புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த ஆடு ஜீவிதம்! வசூலி மஞ்சுமெல் பாய்சை பின்னுக்குத் தள்ளி சாதனை!

ABOUT THE AUTHOR

...view details