சென்னை: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேச்சிற்கு இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்பு தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டில் விஜய் பேசுகையில், அரசியல் பாம்பு போன்றது எனவும், பாம்பாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில், பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர், கடவுள் மறுப்பு மட்டுமே கையில் எடுக்கவில்லை, அண்ணாவை ஒன்றே குலம் ஒருவனே தெய்வம். காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், இவர்கள் வேகமானவர்கள், ஆனால் விவேகமானவர்கள் என சொல்ல வேண்டும்.
சாதி இருக்கும், சைலண்டாக இருக்கும், அதை வைத்து நம்மை மாற்ற நினைத்தால் அதனை மக்களே அனுமதிக்க மாட்டார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் எதிரி, திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் அரசியல் எதிரி, திராவிடத்தையும், தமிழ் தேசியமும் மண்ணின் இரு கண்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விஜய் பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும், எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் பேசியது குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தவெக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.