சென்னை: ’விடாமுயற்சி’ படத்தின் கதை என்னுடையது இல்லை என இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.
இதனைத்தொடர்ந்து அஜித் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் ஊடகத்தில் விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பேசுகையில், “அஜித் சார் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய 15 வருட கனவு. திடிரென அஜித் சாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் இருந்து எனக்கு AK62 படத்தை இயக்க அழைப்பு வந்தது. எனக்கு சர்ப்ரைசாக இருந்த நிலையில், படத்தை உடனே தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.