சென்னை: ’இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமண விழாவில் சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர். டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தனுஷ், இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது தனுஷின் 52வது திரைப்படமாகும் இந்த வருடம் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ’இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரை பிரபங்களும் கலந்து கொண்டனர்.
நயன்தாரா ’நானும் ரௌடி தான்’ பட காப்புரிமை விவகாரத்தில் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து சிறிது நாட்களில் ஒரே விழாவில் இருவரும் கலந்து கொண்டு, அருகில் அமர்ந்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.