தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் விவாகரத்து? - சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ உண்மையா? - abhishek Bachchan Aishwarya Rai - ABHISHEK BACHCHAN AISHWARYA RAI

நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் புகைப்படம்
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் புகைப்படம் (Credits - ANI, ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 1:09 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வரும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. பிரபல தொழிலதிபர் அம்பானி மகன் திருமணத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டது இந்த சர்ச்சை பேச்சுகளுக்கு ஆரம்பமாக அமைந்தது.

மேலும் அபிஷேக் பச்சன், தான் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்துவிட்டதாக கூறுவது போல் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அபிஷேக் பேசியது போன்று வெளியானது ஃபேக் வீடியோ என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

அந்த வீடியோவில் அபிஷேக் பச்சன், "இந்த ஜூலை மாதம் நானும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம்" என கூறுகிறார். ஆனால் அந்த வீடியோவில் உதடு அசைவு சரியாக இல்லாததால் ஃபேக் வீடியோ என எளிதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் பேசிய உண்மையான வீடியோவை ஈடிவி பாரத் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

அந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டது. மேலும் அந்த வீடியோ "நான்ஹி காலி" என்ற இந்தியாவில் பின்தங்கிய பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் நோக்கத்தில் பகிரப்பட்டது.

மேலும் நடிகை டாப்ஸியும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி ஏன் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: எனக்கு ரசிகர்கள் குறைவா? தங்கலான் படம் ரிலீசாகும் போது பாருங்கள்.. செய்தியாளருக்கு சவால் விடுத்த விக்ரம்! - Actor vikram

ABOUT THE AUTHOR

...view details