சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டன் யார் என்ற கேள்வியுடன் தொடங்கியது. Blind fold taskஇல் தர்ஷிகா வந்த வேகத்தில் ஆண்கள் அணியைனரை அவுட்டாக்கினார். ரஞ்சித் டாஸ்க் என்ற பெயரில் வீட்டை சுத்தம் செய்தது தான் மிச்சம். இதனைத்தொடர்ந்து இந்த சீசனில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அணி மாறுதல் ஒட்டெடுப்பு பெண்கள் அணியில் நடைபெற்றது. அப்போது சவுந்தர்யா விருப்பம் தெரிவிக்க, பெண்கள் அணியில் அனைவரும் கேள்விகளை அம்பு போல விட்டனர். அதே நேரத்தில் சவுந்தர்யா வீடு மாற வேண்டும் என கூறிய காரணங்களில் தெளிவு இல்லை. தனது மனதில் நினைத்துள்ளதை சவுந்தர்யா தெளிவாக பேச தவறுகிறார் என தோன்றுகிறது.
இதனைத்தொடர்ந்து சாச்சனா, தான் ஆண்கள் அணியில் சரியான உளவாளியாக இருப்பேன் என கூறினார். இதனையடுத்து பெண்கள் அணியில் ஒரு மனதாக சாச்சனாவை தேர்வு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்ப, பெண்கள் அணிக்கு ஜெஃப்ரி இடம் மாறினார். பின்னர் மிகவும் முக்கியமான நாமினேஷன் பஞ்சாயத்து தொடங்கியது. இதில் நேரடி நாமினேஷன் மூலம் அருண், தர்ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே ஆண்கள் அணியினர் முன்பு பிக்பாஸ் தொடங்கிய போது பெண்கள் அணியிடம் ஆண்கள் அணியினரை ஒரு வாரத்திற்கு நாமினேட் செய்யக் கூடாது என்ற கண்டிஷனை பயன்படுத்த முயன்றனர். இதற்கு பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷனில் ஆண்கள், பெண்கள் என அணி வித்தியாசம் இல்லை என முட்டுக்கட்டை போட்டார். பின்னர் ரகசிய நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், சத்யா, பவித்ரா, முத்துக்குமரன், சவுந்தர்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் சவுந்தர்யா அதிகபட்சமாக 6 ஓட்டுகள் பெற்றார்.