தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மொழி பெரிதா? இசை பெரிதா? - பாடலாசிரியர் சினேகன் சொல்வதென்ன? - Snehan about Ilayaraja issue - SNEHAN ABOUT ILAYARAJA ISSUE

Snehan about Ilayaraja Vairamuthu issue: தன் உரிமைக்காகப் போராடுவது எப்போதும் தவறாக இருக்காது என இளையரஜா - வைரமுத்து இடையே வெடித்துள்ள சர்ச்சை குறித்து பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் சினேகன் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம்
பாடலாசிரியர் சினேகன் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் (credit - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 4:15 PM IST

சென்னை:எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் - யோகராஜ் செபஸ்டின் தயாரித்து, இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவாகும் படம் 'நாளைய இயக்குநர்'. இப்படத்தின் பூஜை மற்றும் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 4) சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகர்கள் கூல் சுரேஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சந்தோசம். இமான் அண்ணாச்சி மூலம் தான் வாய்ப்பு வந்தது. நமக்கு பின் எப்போதும் கூட்டம் இருக்கும். இது தானா சேர்ந்த கூட்டம்.

5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவுக்கு சமமாக நான் இருக்கிறேன். இது ரசிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு படம் பார்க்க வரும் கூட்டத்தையும், என்னைப் பார்க்க வரும் கூட்டத்தையும் பாருங்கள். எனக்கு சினிமா தான் உயிர்.

பிக்பாஸ் பிறகு வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்களே, 3 படம் ஹீரோவாக நடிக்கிறேன். இயக்குநர் உதயா அனுமதி இல்லாமல் அந்த படத்தின் பெயரை சொல்லக்கூடாது. விரைவில் அந்தப் படத்தின் பெயர் வெளியிடப்படும்” என்றார். பின்னர், பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “நாளைய இயக்குநர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. சினிமாக்காரர்களைப் பற்றி குறைவான படங்களே வருகிறது. அது ரொம்ப ஆச்சரியமாகவும், அழகாகவும் இருந்தது” என்றார்.

மேலும், இளையராஜா - வைரமுத்து பிரச்சினை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சினேகன், “தன் உரிமைக்காக போராடுவது எப்போதும் தவறாக இருக்காது. காலம் தாழ்த்தி இப்போது ஒரு விவாதத்தை துவங்கி இருக்கிறார்கள். அதில் கருத்து சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பாட்டுக்கு இசையா அல்லது இசைக்கு பாட்டா என்பதை விட, படத்துக்கு பாட்டு தேவைப்படுகிறது. அதை நோக்கி நான் போகிறேன்.

அவர் உரிமையை அவர் கேட்கிறார். இன்னும் நீதிமன்றத்தில் நீதி உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ, அவர்களுக்கான நீதி கிடைக்கும். ஒருத்தர் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவது அவர் உரிமை. அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்றும் இல்லை, இது சரியா தவறா என்று நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். நான் இதில் தலையிட முடியாது.

ஏற்கனவே, ஐபிஆர்எஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. உலக அளவில் இசையை எப்படி பயன்படுத்துகிறார்கள், அது யார் யாருக்கு அந்த உரிமை வரவேண்டும் என்று ஒரு பெரிய கட்டமைப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இளையராஜா உரிமையை கோருகிறார். அதிலுள்ள நியாயம், விவாதங்களை முடிவெடுக்க வேண்டும். பணத்தைப் போடுவது தயாரிப்பாளர் என்றாலும் இங்கு ஒரு சிஸ்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் போது அதை யார் யாருக்கெல்லாம் சேர வேண்டும், அதை உருவாக்கியவர் யார் என்று இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் வழக்கு போடுகிறார்கள். அது இன்னும் தீர்வுக்கு வரவில்லை. வரும் போது தான் சொல்ல முடியும். ஒரு வழக்கோ, விவாதமோ நீதிமன்றத்தில் இருக்கும்போது, அதை ஒரு தனி மனிதனாக நான் தீர்வு சொல்ல முடியாது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, கூலி படத்தி காப்பி ரைட்ஸ் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், “கண்டிப்பாக என்னுடைய உரிமை பறிபோகும் போது நான் குரல் கொடுப்பேன். ஆனால், அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று போராடுவதற்கான வலு இருப்பவர்கள் போராடுகிறார்கள். வாய்ப்பு வரும் வரை எங்களை மாதிரி சில பேர் அமைதியாக இருக்கிறார்கள். அவரவர் உரிமைக்காகப் போராடுகிறார்கள்.

அதில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை நீதிமன்றம் சொல்லும். தவறு செய்வதில் பெரியவர் சிறியவர் என்று யாரும் இல்லை. யார் செய்தாலும் தவறு தவறு தான். அது தவறு கொடுங்கள் என்று அவர் கேட்கிறார். அது தவறா, இல்லையா என்று நீதிமன்றம் சொல்லப் போகிறது. என்னுடைய பாடல்களை இந்த நிறுவனம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று ஒரு நிறுவனத்தை கேட்பதாகவும், என்னிடம் ஒரு அனுமதியாவது கேட்டிருக்கலாமே என்று தான் சொல்கிறார். இதை வெளியில் இருந்து கணிக்க முடியாது.

இது காலம் தாழ்த்தி போன வழக்கு. ஏற்கனவே 20 வருடமாக நீயா நானா என்று பேசிக் கொண்டு இருப்பதாகவும், இது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. எங்கே இந்த காழ்ப்புணர்வு தொடங்கியது என்று நமக்கு தெரியாது. எழுத்து எப்படியும் ஒரு எழுத்தாளருக்கு முக்கியமோ, அது போல இசையமைப்பாளருக்கு இசை ரொம்ப முக்கியம். தமிழ் சினிமாவிலும் பாடலுக்கு சில நாம்ஸ் (Norms) இருக்கிறது.

தன்னிடம் எதுவும் சொல்லாமல் பயன்படுத்தும் போது கேட்பது எனக்கு தவறாக தோன்றவில்லை. இனி வருங்காலத்தில் கேட்டு பயன்படுத்தலாம். நிறைய படங்களில் இளையராஜா சாரிடம் அனுமதி கேட்டு அவர் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. வழக்கும் போடவில்லை. பணம் கேட்டாரா, வாங்குனாரா என்று எதுவுமே நமக்கு தெரியாது. குறைந்தபட்சம் என்னிடம் அனுமதி கேளுங்கள் என்று சொல்கிறார்” என்றார்.

பின்னர், வைரமுத்துவைப் பற்றி கங்கை அமரன் பேசியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், “இவ்வளவு காலம் கழித்து இவர் பேச வேண்டிய அவசியம் இல்லை. முடிந்து போச்சு. அதற்குப் பிறகு எழுதும்போது ஏதாவது பிரச்சினை வந்தால் பேசலாம். இளையராஜா, வைரமுத்து மற்றும் கங்கை அமரனுக்கு என்ன பிரச்சினை, பிரிந்த சரியான காரணத்தை சினிமாவில் யாராவது சொல்ல முடியுமா? தொடக்கம் முடிவும் எதுவும் தெரியாது.

இடையில் நாம் ஏன் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும் என்பது தான். எனக்கு தெரிந்து காலம் தாழ்த்தி அவர் பேசியிருக்கக் கூடாது. அதற்கு அவர் அதிகப்படியான வார்த்தையையும் விட்டிருக்கக்கூடாது. அதுதான் தாழ்மையான வேண்டுகோள். இருவர் மீதும் எனக்கு மதிப்பு இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: உத்தம வில்லனாக மாறும் லிங்குசாமி - கமல்ஹாசன் விவகாரம்.. என்னதான் நடந்தது? முழு விவரம்! - Kamalhaasan Vs Lingusamy

ABOUT THE AUTHOR

...view details