தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குக் வித் கோமாளி சீசன் 5.. நடுவர் மாற்றம்.. களமிறங்கும் புதிய பிரபலங்கள்! - Cook With Comali Season 5 - COOK WITH COMALI SEASON 5

Cook With Comali Season 5: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி நாளை மறுநாள் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில் போட்டியாளர்களாக களமிறங்க உள்ள பிரபலங்கள் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Cook With Comali Season 5
குக் வித் கோமாளி சீசன் 5

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 1:41 PM IST

சென்னை:பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக இது உள்ளது. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் ஒரு குக் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளியின் 5-வது சீசன் வருகிற 27ஆம் தேதி, இரவு 9.30 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்குகிறது.

நடுவர் மாற்றம்: கடந்த 4 சீசன்களில் நடுவராக பங்கேற்ற சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார். இந்நிலையில், சீசனில் 5ல் சமையல் கலைஞர் தாமுவுடன், மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிகழ்ச்சியில் முதன் முறையாக நடுவராக பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை, வழக்கம் போல் தொகுப்பாளர்கள் ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

ஏப்ரல் 27ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 5 துவங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சி குறித்த புரோமோ வெளியிடப்பட்டு வருகிறது. கோமாளிகள் யார் என்பதை அறிவிக்கும் விதமாக வீடியோ வெளியான நிலையில், தற்போது இந்த முறை குக்காக களமிறங்க உள்ள போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோமாளிகள்: இந்நிகழ்ச்சியில், கடந்த சீசன்களில் கோமாளிகளாகப் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி, மோனிஷா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கோமாளிகளாகத் தொடருகின்றனர். மேலும், இந்தப் பட்டியலில் புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், அன்ஷிதா, ஷப்னம், சரத், வினோத் உள்ளிட்டோர் கோமாளியாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழ், குரேஷியுடன் இந்த முறை ராமரும் இணைந்துள்ளதால், இந்த சீசன் மிகவும் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்(குக்குகள்): இந்த முறை யாரும் எதிர்பாராத சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி 5வது சீசன் நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத பல பிரபலங்கள் குக்குகளாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களும் நிகழ்ச்சியை காண ஆயத்தமாகி வருகின்றனர்.

இதையும் படிங்க:உலக செஸ் சாம்பியன் பட்டம் பெறுவதே இலக்கு: சென்னை திரும்பிய குகேஷ் நம்பிக்கை! - Gukesh

ABOUT THE AUTHOR

...view details