தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி2898 AD’ படத்திலிருந்து புஜ்ஜி வாகனம் சென்னையில் அறிமுகம்! - Bujji Car in Chennai - BUJJI CAR IN CHENNAI

Kalki 2898 AD: இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள கல்கி 2898 AD படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான புஜ்ஜி சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

புஜ்ஜி வாகனம்
புஜ்ஜி வாகனம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 10:42 PM IST

Updated : May 28, 2024, 10:55 PM IST

சென்னை:இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ சென்னையில் இன்று பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவு திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி, படக்குழுவினர் புரமோஷன் பணிகளை பிரமாண்டமாக துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், கல்கி படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி வரவேற்பை பெற்ற நிலையில், வாகனத்தைக் காண மக்கள் ஏராளமானோர் திரண்டனர். கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன் எதிர்காலத்தைக் கண்முன் கொண்டு வரும் வகையில், புஜ்ஜி வாகனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும், நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு பன்மொழி படைப்பாக புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிரபல மலையாள நடிகர்... படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்த சிம்பு! - Pani Movie First Look

Last Updated : May 28, 2024, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details