தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சவுந்தர்யா VS சுனிதா... பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் முற்றும் மோதல்! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8 tamil: பிக்பாஸ் 8 தமிழில் இன்று வெளியான ப்ரோமோவில், ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் சிறந்த போட்டியாளர்கள் ஒரு அணியாகவும், சரியாக விளையாடாத போட்டியாளர்கள் ஒரு அணியாகவும் பங்கேற்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் பவித்ரா, சவுந்தர்யா, சுனிதா
பிக்பாஸ் போட்டியாளர்கள் பவித்ரா, சவுந்தர்யா, சுனிதா (Credits - Vijay Television X Account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 24, 2024, 3:55 PM IST

சென்னை: பிக்பாஸ் நட்சத்திர ஹோட்டல் டாஸ்கில் நேற்று ஆண்கள் அணியினர் ஹோட்டல் நிர்வாகிகளாகவும், பெண்கள் அணியினர் வாடிக்கையாளர்களாகவும் பங்கேற்றனர். இந்த டாஸ்கில் பெண்கள் அணியினர் நடிகை, மாடல், வயதான பாட்டி, மாமியார் மற்றும் மருமகள் என பல கேரக்டர்களில் நடித்தனர். இதில் ஆண்கள் அணியை பெண்கள் பழி தீர்ப்பதற்காக திக்குமுக்காட வைத்தனர். வேண்டுமென்றே அடுத்தடுத்து ஆர்டர் கொடுத்து ஆண்களை குழப்பினர்.

இதனால் புகார் போர்டில் ஆண்கள் அணியினர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும் சாச்சனா புகார் போர்டில் ஹோட்டல் நிர்வாகி ஜெஃப்ரி தன்னை சரியாக கவனிக்கவில்லை என புகார் எழுதினார். விசாரணையில் ஜெஃப்ரியை மரியாதை குறைவாக நடத்தியது தெரியவந்தது. பவித்ரா தன் பங்கிற்கு ஆண்கள் அணியினரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் வேலை கொடுத்து கொண்டு இருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, சவுந்தர்யா சப்பாத்தி சரியில்லை எனவும், இது போன்று சாப்பிட்டால் ஜாக்குலினின் முகம் போன்று ஆகும் என கூறினார். இதனால் கோபமடைந்த ஜாக்குலின் தனது உடலை கிண்டல் செய்ய வேண்டாம் என சவுந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்தார். ஹோட்டல் டாஸ்கில் பெண்கள் அணியை விட ஆண்கள் அணியினர் அதிக பிக்பாஸ் கரன்சி பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நாமினேஷன் ஃப்ரி டாஸ்காக dumb charades போட்டி வைக்கப்பட்டது. இதில் சாமர்த்தியமாக விளையாடிய பெண்கள் அணி வெற்றி பெற்றது. இன்று ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் நன்றாக விளையாடிய போட்டியாளர்கள் ஒரு அணியிலும், மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் ஒரு அணியிலும் விளையாட உள்ளனர். இதில் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாகவும், சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஓடிடியில் கவனம் பெறும் ’போகுமிடம் வெகு தூரமில்லை’... படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் சேதுபதி!

இன்று வெளியான ப்ரோமோவில் சவுந்தர்யாவிற்கும் சுனிதாவிற்கும் சண்டை ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து வெளியான மற்றொரு ப்ரோமோவில் ஆனந்திக்கும், முத்துக்குமரனுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் ஆனந்தி, முத்துவிடம் ”உங்களிடம் இனி பேச முடியாது” என கூறிவிட்டு சென்று அழுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் இதுவரை சீசனில் பார்வையாளர்களுக்கு கவரும் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details