தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை வெளியாகிறது 'வடக்கன்' ஃபர்ஸ்ட் லுக்! - வடக்கன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Vadakkan Film First Look Poster: எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

vadakkan Film First Look Poster
'வடக்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 12:13 PM IST

சென்னை:எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வருகின்ற 29ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை வசனமும் எழுதியவர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் உடன் பயணித்து வருபவர்.

இந்நிலையில், டிஸ்கவரி சினிமாஸ் சார்பில், மூ.வேடியப்பன் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார். 'வடக்கன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய கதையை நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக இயக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, வருகின்ற 29ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குசாமி, சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர் நாசர் உள்ளிட்டோர் வெளியிடுகின்றனர்.

இதையும் படிங்க:விடுதலையான பிறகும் நிறைவேறாத ஆசை.. தாய்மடி சேராமல் பிரிந்த சாந்தனின் உயிர்!

ABOUT THE AUTHOR

...view details