ETV Bharat / entertainment

"விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்" - நடிகர் நடராஜ் விருப்பம்! - ACTOR NATARAJ IN COIMBATORE

நடிகர் விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் மனவருத்தமாக உள்ளது என்று நடிகர் நடராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் நடராஜ்
நடிகர் நடராஜ் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Updated : 3 hours ago

கோவை: சினிமா படப்பிடிப்புக்காக கோவை வந்திருந்த ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், "விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மக்கள் காசு கொடுத்து பணம் பார்க்கிறார்கள். அதில் உள்ள நிறை, குறைகளை அவர்கள் சொல்வார்கள். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

அல்லு அர்ஜுன் விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெளிவாக தெரியாது, அந்த பெண் அங்கு வந்தபோது இறந்தாரா, அதன் பிறகு இறந்தாரா? என்ன நடந்தது என்று தெரியாது" என நடராஜ் கூறினார்.

நடிகர் நடராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

மேலும் அவர் கூறும்போது, "ஓடிடி தளத்தில் என்ன பிரச்சனை இருக்கின்றது? அது பரிணாம வளர்ச்சி. அதனால் நாம் தற்போது ஃபோனில் படம் பார்க்கும் அளவிற்கு வந்துவிட்டோம். மேலும் வெர்ச்சுவல் ரியாலிட்டியாக படம் பார்க்கும் அளவிற்கு வந்துவிடுவோம் இது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒரு காலத்தில் 50 லட்சம் ரூபாயில் பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது 120 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள. மல்டிபிளக்ஸ் என்பது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.அதை மாற்ற முடியாது. மக்களும் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள்.நல்ல படங்களுக்கு வரவேற்பும் கிடைக்கும்.

Ai தொழில்நுட்பத்தால் பிரச்சனை இருக்கின்றது. அதை நாம் அளவாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் அதிகம் பயன்படுத்தும்போது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நல்லதும் செய்யலாம். 'படைத்தலைவன்' படத்தில் விஜயகாந்தை காண்பித்துள்ளது AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான். அதுபோன்று நல்ல விஷயங்களுக்கு AI தொழிற்நுட்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். சூர்யா படத்தின் படப்பிடிப்புக்காக கோவை வந்துள்ளேன். தற்போது வரைக்கும் இரண்டு மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் அதற்கு பெயர் வைக்கவில்லை. கூடிய சீக்கிரம் ஒளிப்பதிவாளராக என்னை பார்க்கலாம்." என்று நடிகர் நடராஜ் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடராஜ், "அது அவருடைய தனிப்பட்ட முடிவு. அரசியலுக்கு வந்துவிட்டார்; பொதுக்கூட்டங்கள் போட்டுவிட்டார். என்னை பொருத்தவரைக்கும் அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் மனவருத்தமாக உள்ளது." என்று நடராஜ் தெரிவித்தார்.

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.