சென்னை: தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ஊடக வாழ்க்கையை தொடங்கி பின்னர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற மெகா தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. பின்னர் நடிகர் அருண் விஜய்யுடன் மாஃபியா சாப்டர் 1, எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருள்நிதியுடன் களத்தில் சந்திப்போம், அசோக் செல்வனுடன் ஹாஸ்டல், ஜெயம் ரவியுடன் அகிலன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனால் சமூக வலைதளங்களில் பிரியா பவானி சங்கரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இந்தியன் 2 பெரிய வெற்றியை பெறவில்லை.
பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 150 கோடி வரை வசூல் செய்துள்ளது. எனினும் இப்படத்திற்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிட்டனர். மேலும் நடிகை பிரியா பவானி சங்கரையும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து டிமான்டி காலனி 2 வெளியாகவுள்ளது. இந்நிலையில் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரியா பவானி சங்கர், “இந்தியன் 2 படம் எதிர்மறையான விமர்சனம் பெற்றது. அதற்கு நான் தான் காரணம் என என்னை தவறான முறையில் விமர்சித்து வருகின்றனர். அந்த விமர்சனங்கள் என்னை காயப்படுத்தியது. படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.
நான் நடிக்கும் படங்களில் ஆரோக்கியமான முறையில் முன் வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி வரும் விமர்சனங்களை ஏற்க முடியாது. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசனிடம் நிறைய கற்றுக்கொண்டேன். மீண்டும் ஷங்கர், கமல்ஹாசனின் படங்களில் நடிப்பீற்களா என்று கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன். எந்த நடிகையும் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்”. என கூறியுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன் ஃபகத் ஃபாசில்.. வேட்டையன் ஸ்பெஷல் பேஸ்டர் வெளியீடு! - Fahadh faasil birthday