சென்னை : மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் நடிகை மடோனா செபாஸ்டியன். அதன்பின், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்திலும் நடிகை மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் மடோனாவின் நடிப்பி அனைவராலும் பாராட்டப்பட்டது.
சமீபத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மடோனா நடித்திருந்தார். இவ்வாறு தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, தனது நடிப்பு மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் மடோனா.
இவர் தற்போது நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து 'ஜாலியோ ஜிம்கானா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தை டிரெண்ட்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ள இப்படம் நவ 22ம் தேதி வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திலிருந்து 'போலீஸ்காரனை கட்டிக்கிட்டா' என்ற பாடலின் வீடியோ வெர்ஷன் நாளை( நவ 20) வெளியாக உள்ளது.
இதையும் படிங்க :நடிகர் அஜித்துக்கு நான் போட்டியா?... அருண் விஜய் கூறியது என்ன?