சென்னை:ஹோம்பலே ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகாந்தர் தயாரிப்பில், இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் சுமன் குமார், இசையமைப்பாளர் சான் ரோல்டன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், "மிகவும் சந்தோஷமான தருணம் இது. இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போதே நிறைய இடங்களில் என்னை சிரிக்க வைத்துவிடார். ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.