தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்" - நடிகை கெளதமி! - Gautami money fraud case - GAUTAMI MONEY FRAUD CASE

actress Gautami: பண மோசடி விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.

நடிகை கெளதமி
நடிகை கெளதமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 4:54 PM IST

ராமநாதபுரம்: நடிகை கெளதமியிடம் காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள சுவாத்தான் கிராமத்தில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 கோடி பெற்று கொண்டு நிலம் வாங்கி தராமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கி கொடுத்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கெளதமி அவரிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகையை பெற்று தர வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியார் ஆகியோர் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கெளதமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிபதியிடம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி, "எனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பத்து எண்றதுகுள்ள கங்குவா இங்க வரணும்.. மிரட்டலுடன் வெளியானது 'கங்குவா' டிரெய்லர்! - KANGUVA TRAILER

ABOUT THE AUTHOR

...view details