தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிரிக்கத் தயாராகுங்க.. தேசிங்குராஜா 2 படப்பிடிப்பு நிறைவு! - DESINGU RAJA 2 Update - DESINGU RAJA 2 UPDATE

Desingu Raja 2: இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் தேசிங்குராஜா 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் படக்குழு
படப்பிடிப்பு தளத்தில் படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 6:13 PM IST

சென்னை: இயக்குநர் எழில் தமிழ் சினிமாவில் 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவர் இயக்கித்தில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார், பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி, மனம் கொத்தி பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், தேசிங்குராஜா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் எழில் இயக்கத்தில், தேசிங்குராஜா படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதிலும், நடிகர் விமல் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கின்றனர்.

மேலும், நடிகர்கள் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 20ஆம் தேதி தேசிங்குராஜா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தில், கவிஞர் சூப்பர் சுப்பு பாடல் வரிகளில், ஜித்தின் ராஜ், எம்.எம்.மானசி குரலில் உருவான "டோலி டாங்க் ஆனா டேஞ்சரு.. ரொம்ப டேஞ்சரு.." என்ற பாடலுக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.50 லட்சம் செலவில் கலை இயக்குநர் சிவசங்கர் பிரமாண்ட பங்களா செட் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

நடன இயக்குநர் தினேஷ் நடன வடிவமைப்பில் உருவாகி வரும் இந்தப் பாடலில் விமல் மற்றும் பிரபல பாலிவுட் டான்சர் சினேகா குப்தா இருவரும் இணைந்து ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மருத்துவ உதவி நாடிய நடிகர் வெங்கல் ராவ்.. உதவிக்கரம் நீட்டிய சிலம்பரசன்! - Actor Vengal rao medical Issue

ABOUT THE AUTHOR

...view details