தூத்துக்குடி: சார், போகுமிடம் வெகு தூரமில்லை ஆகிய படங்கள் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் விமல் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் விமலை சூழ்ந்த பக்தர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விமல், "சார், போகுமிடம் வெகு தூரமில்லை படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. சார் திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளதாகவும், மேலும் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதாகவும் கூறினார்.
தேசிங்கு ராஜா 2 திரைப்படம் பொழுதுபோக்கான கதை அம்சத்தில் இருக்கும். இந்த திரைப்படம் பொதுமக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றார். இதனைத் தொடர்ந்து, விஜய் அரசியல் வருகை பற்றி கேட்ட போது பதில் சொல்ல மறுத்துவிட்டார். மேலும், நடிகர் தனுஷ் - தயாரிப்பாளர் சங்கம் விவகாரத்தைப் பற்றி கேட்டபோது, அது குறித்து எனக்குத் தெரியவில்லை" என்று பதிலளித்தார்.