தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சர்கார் பட பாணியில் வாக்களிக்கிறாரா விஜய்? விமான நிலையம் டூ வாக்குச்சாவடி! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Vijay Lok Sabha elections: நாளை தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ரஷ்யாவில் கோட் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய், சென்னை விமான நிலையம் வந்து, நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 10:36 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் வருகிற செப்.5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, அஜ்மல், வைபவ், மோகன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரின் நடனம் மிகப் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நடிகர் விஜய் ரஷ்யாவில் இருந்து இன்றிரவு சென்னை திரும்புவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வரும் விஜய், அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோட் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீதம் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் ரஷ்யாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு படங்களில் மட்டும் விஜய் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கோட் பட பாடலால் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகல்? யுவன் ஷங்கர் ராஜா கூறிய பதில் என்ன? - Yuvan Deleted Instagram Account

ABOUT THE AUTHOR

...view details