திருப்பூர்: நடிகர் விதார்த் நடிப்பில் 'லாந்தர்' திரைப்படம் தமிழகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதனை முன்னிட்டு திருப்பூர் ஊத்துக்குளி ரோடு வாவிபாளையம் பகுதியில் உள்ள கே.எஸ்.டி. திரையரங்கிற்கு நடிகர் விதார்த் வந்து ரசிகர்களுடன் லாந்தர் படத்தை கண்டுகளித்தார்.
திரைப்படத்தை கண்டுகளித்த நடிகர் விதார்த் (credits-ETV Bharat Tamil Nadu) இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு நடிகர் விதார்த் அளித்த பேட்டியில், "லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஒரு திரில்லர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என்றும் முதற்கட்டமாக 100 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக திரையரங்குகளில் வெளியிடப்படும் எனக் கூறினார். மேலும் தமிழகத்தில் நல்ல படங்களுக்கு இடையே எப்போதும் போட்டியிருக்கும் என்றும் பொதுமக்கள் ஆதரவும் தெரிவிப்பார்கள் என பேசினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளது வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர், இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது என்றும் நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். லாந்தர் படத்திலும் முதல் காட்சி கள்ளச்சாராயம் தொடர்பாக இடம்பெற்று உள்ளதாகவும் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நாளைய தீர்ப்பு முதல் நாளைய முதல்வர் வரை.. நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷல்!