தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விதார்த் - ஜனனி காம்போவில் உருவாகும் புதிய படம்! - Vidharth new movie - VIDHARTH NEW MOVIE

Actor Vidharth starrer in New Movie: இயக்குநர் கிருஷ்ணா குமார் இயக்கத்தில், நடிகர் விதார்த் மற்றும் ஜனனி நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 6:23 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைச் செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் ஃப்லிம்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. குவியம் ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில், லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் புதிய படத்தின் ஆரம்பப் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத, லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த் படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.

இப்படம் குறித்து கிருஷ்ணா குமார் கூறும்போது, "நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. ஏதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம்.

சஸ்பென்ஸ் த்ரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என தெரிவித்தார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:ராமோஜி ராவ்-க்கு பாரதா ரத்னா விருது வழங்க வேண்டும் - இயக்குநர் ராஜமௌலி வலியுறுத்தல்! - Ramoji Rao death

ABOUT THE AUTHOR

...view details