சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான கார்த்தி கதையம்சம் உள்ள படங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருபவர். கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ’மெய்யழகன்’ பலராலும் பாரட்டப்பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் நடிகரகா அறியப்படும் ‘டாணாக்காரன்’ திரைப்பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இது அவரது 29வது படமாக அமையும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் என எடது குறித்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸை வேறு விதமாக ஆரம்பித்துள்ளார். சீரியஸான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இதனால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. வடிவேலு இப்படத்தில் நடித்தால் கார்த்தியும் வடிவேலும் இணையும் முதல் படமாக இது இருக்கும்.