தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உறியடி விஜய் குமாரின் 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - Actor Uriyadi Vijay Kumar

Election Movie: இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜய் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜயசேதுபதி வெளியிட்டார்.

எலக்சன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
எலக்சன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 11:20 AM IST

சென்னை:உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகராக உயர்ந்தார் விஜய் குமார். இந்த நிலையில் தற்போது இவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.‌ இதனை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எலக்சன் திரைப்படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் வத்திக்குச்சி திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ் பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை ஏழுமலை மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (பிப்.22) வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்ல் கதையின் நாயகனான விஜய் குமாரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருக்கிறது.

இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக், லிரிக்கல் வீடியோ, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எலக்சன் என்னும் தலைப்பைக்கொண்ட இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க:"கேமரா முன் நடிப்பது அவ்வளவு எளிதல்ல" - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details