சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து நாள்தோறும் ஏரளமான விமானங்கள் வந்து செல்கின்றன. அந்த வகையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 4 ஆம் தேதி தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்தனர்,
அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர் சுற்றுலா பயணி விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவருடைய உடமைகளை போதைப் பொருட்களை கண்டுபிடிக்கும் சுங்கத்துறையின் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அப்போது மோப்பநாய் அவரது உடமையை முகர்ந்து விட்டு குறைத்து உள்ளது.
இதையடுத்து உடனடியாக சுங்க அதிகாரிகள் அந்த பயணியின் உடமையை திறந்து பார்த்து பரிசோதித்த போது அதனுள் இருந்த 3 பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட, உயர்ரக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 6.9 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சுங்க அதிகாரிகள் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அந்த பயணியையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது இவரை இந்த கடத்தலுக்காக தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்த நபர் யார், அல்லது இவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலா என்ற கோணத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்! - GANJA SEIZED
சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Published : Feb 6, 2025, 6:01 PM IST