புதுக்கோட்டை:பிரபல நடிகரான அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தம்பி ராமையாவின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ராராபுரத்தில் உள்ள அவரது குலதெய்வமான திருவேட்டழகர் கோயிலுக்கு ஐஸ்வர்யா - உமாபதி புதுமணத் தம்பதியினர் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தனர்.
திருமணம் முடிந்த கையோடு குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்திய உமாபதி - ஐஸ்வர்யா தம்பதி! - Umapathy and Aishwarya visit Temple - UMAPATHY AND AISHWARYA VISIT TEMPLE
Umapathy and Aishwarya visit Temple: புதுக்கோட்டையில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்திய நடிகர் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர், அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேக், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ் உள்ளிட்டவற்றை வழங்கினர்
Published : Jun 28, 2024, 6:09 PM IST
அங்கு அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை செய்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராராபுரம் அரசுப் பள்ளிக்குச் சென்ற உமாபதி - ஐஸ்வர்யா தம்பதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேக், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ் உள்ளிட்டவற்றை வழங்கினர். பள்ளி மாணவ, மாணவிகள் புதுமணத் தம்பதியிக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, உமாபதி - ஐஸ்வர்யா தம்பதி ராராபுரத்தில் உள்ள உற்றார் உறவினர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
இதையும் படிங்க:'சன்னி லியோனின் இமேஜ் இனி மாறும்' - நடிகை பிரியாமணி கூறுவது என்ன? - SUNNY LEONE New MOVIE