சென்னை : கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருந்த புதிய திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதில், சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார்.
இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. இப்படத்தில், புகைப்பட இயக்குநராக சக்திவேல், எடிட்டராக கனேஷ் சிவா, நிர்வாக தயாரிப்பாளராக பானு பிரியா உள்ளிட்ட பலரும் பணியாற்றி உள்ளனர்.
இதையும் படிங்க :'லாபதா லேடீஸ்' படத்தில் அப்படி என்ன இருக்கு?.. ஆஸ்கர் தேர்வுக்கு இயக்குநர் வசந்த பாலன் எதிர்ப்பு!
சூரியின் வித்தியாசமான நடிப்பு, படம் சொன்ன விஷயங்கள், காட்சியமைப்பு, பின்னணி இசை இல்லாதது என இப்படம் முற்றிலுமாக மாறுபட்ட படமாக அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ( செப் 27) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு 6 படங்கள் அனுப்பப்பட்டன. அதில் கொட்டுக்காளி திரைப்படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் கூழாங்கல் படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்