சென்னை: நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ள 'Miss you' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘மிஸ் யூ’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 29ஆம் தேதி ’மிஸ் யூ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ரொமான்டிக் லவ் ஸ்டோரியாக மிஸ் யூ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ராஜசேகர் முன்னதாக ஜீவா நடித்த ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.