தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிம்பு - யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்! - SWEETHEART 1ST LOOK POSTER OUT NOW

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்வீட் ஹார்ட் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Credits - Raja yuvan X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 10:51 PM IST

சென்னை :தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான இருப்பவர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் வெளியான ’ஜோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார் ரியோ ராஜ். தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஸ்வீட் ஹார்ட்'.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன், கலை இயக்கத்தை சிவசங்கர் ஆகியோர் கையாண்டுள்ளனர். காமெடி கலந்த ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய்.எஸ்.ஆர் ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில், யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

இதையும் படிங்க :நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவகாரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு!

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், திரையில் இளம் காதலர்களான ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்டனர். இதனிடையே யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் 'ஸ்வீட் ஹார்ட்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details