ETV Bharat / state

தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் தொன்மை இருந்ததை தெளிவுபடுத்தும் சிவகளை அகழாய்வு! - ANTIQUITY OF IRON

தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் தொன்மை இருந்ததை சிவகளை அகழாய்வு தெளிவுபடுத்துவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிவகளை அகழாய்வு
சிவகளை அகழாய்வு (Image credits-TN GOVERNMENT)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 3:12 PM IST

சென்னை: தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் தொன்மை இருந்ததை சிவகளை அகழாய்வு தெளிவுபடுத்துவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நான்காம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளுக்குள் தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் தொன்மை இருந்திருக்கிறது. இந்த இரும்பின் தொன்மை என்பது கடந்த 2019-2022ஆம் காலகட்டத்துக்கு இடையே தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையானது சிவகளையில் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் பள்ளத்தாக்கில் இரும்பு காலத்தின் வாழ்வாதாரம் மற்றும் இடுகாடு பகுதியில் ஆய்வுள் மேற்கொள்ளப்பட்டன.

இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் இருந்து அண்மைகால கதிரியிக்கக் காலக்கண்கீடுகள் என்ற அகழாய்வு அறிக்கையின்படி ஆய்வு ஆலோசகர் கே.ராஜன், தமிழக அரசின் தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர். சிவநாதம் ஆகியோர் 2019-2022ஆம் ஆண்டுக்கு இடையே சிவகளை மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்து குடியிருப்பு மேடுகள் மற்றும் மூன்று புதைகுழிகள் உள்ளிட்ட 8 பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இரும்பு காலத்தை சேர்ந்த அஸ்தி கலசம் கொண்ட இடுகாடு பகுதி சிவகளை பரம்பு என்று அழைக்கப்படுகிறது. இது 500 ஏக்கரில் அந்த கிராமத்தின் வடக்கு மேற்காக பரந்து விரிந்திருக்கிறது. கல்லறையானது பெட்மாங்கராரம் மற்றும் ஸ்ரீமூலக்கரை ஆகிய அருகில் உள்ள கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. இந்த இடங்களில் மொத்தம் 24 குழிகள் அகழாய்வுக்காக தோண்டப்பட்டன. அதன்படி 160 அஸ்தி கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவை சிவப்பு வண்ணத்தில் காணப்பட்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இது போன்ற அஸ்தி கலசத்தில் எலும்புக்கூடுகளின் எச்சம், இரும்பு பொருட்கள், நெல் தானியங்கள் ஆகியவை இருந்தன. இந்த அஸ்தி கலசம் மூடியுடன் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. அதனுள் மண் ஏதும் இல்லை. உள்ளே துளைகள் இருந்தன. அஸ்தி கலசத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி நெல் தானியங்கள் 1,155 ஆண்டுகளுக்கு முந்தைய பொதுவான யுகத்துக்கு முற்பட்டவையாகும். அதன் முடிவால் ஊக்கமுற்ற தொல்லியலாளர்கள், மூன்று இதர குழிகளில் இருந்து கிடைத்த மரக்கரி மாதிரிகளை முடுக்கி நிறை நிறமாலையியல் (AMS) பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதன் இரும்பு பொருட்கள் பொதுவான காலகட்டத்துக்கு முந்தைய 2953 முதல் 3345 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவையாக இருக்கலாம் என தெரியவந்தது.

3ஆம் நூற்றாண்டின் பொதுவான யுகத்துக்கு முந்தைய காலகட்டத்தின் மத்திம காலத்தில் வைக்கப்பட்டிருந்த குழியில் இருந்து மற்றும் ஒரு அஸ்தி கலசத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் அதன் தொடர்ச்சியான நிலைத்த தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஒளியியல்ரீதியாக தூண்டப்பட்ட ஒளிர்வு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பேராசிரியர் ராஜன், "சிந்து சமவெளி நாகரீகத்தின் செப்பு யுகத்தின் சமகாலத்தை சேர்ந்ததாக தமிழ்நாட்டின் பண்டைய இரும்பு யுகம் இருந்தது. சிவகளை, ஆதிச்சநல்லூரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் 2500 முதல் 3000 பொதுவான ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை இப்போது வெளிப்படுத்தி இருக்கின்றோம். இது வரை நாம் என்ன கண்டறிந்துள்ளோம் என்பதை மேலும் வலுவாகத் தெரிந்துகொள்ள தமிழ்நாட்டில் மேலும் பல பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி நாட்டின் இதரப்பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடலியல் வரலாறு மற்றும் கடல் தொல்லியல் துறையின் தலைவர் வி.செல்வக்குமார், "தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு தொன்மையானது, மேலும் ஆய்வு மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். தமிழ் வரலாறு தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றின் கதவை திறப்பதற்கான திருப்புமுனை என்றும் கூறலாம். தமிழ் நிலப்பரப்பில் மேலும் அகழாய்வுகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியம்," என்பதையும் வலியுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.