ETV Bharat / entertainment

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?... வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் சரமாரி கேள்வி! - PA RANJITH ON VENGAIVAYAL ISSUE

Pa Ranjith On vengaivayal Issue: வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக தமிழக அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததற்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் எதிர்ப்பு
வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் எதிர்ப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 25, 2025, 10:33 AM IST

சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில் விரைவு தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி சார்பில் அந்த கிராமத்தை சேர்ந்த பலரிடம் டிஎன்ஏ பரிசோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வேங்கைவயல் வழக்கில் தொடர்பு இருப்பதாக வேங்கைவயலை சேர்ந்த முரளி ராஜா, சுதர்சன், ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? தமிழக அரசே வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்று அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்திடுக!! வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம். வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை. இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூரில் சாமி தரிசனம்! - BIGG BOSS 8 WINNER VISIT TEMPLE

நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.