தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'VD' போல் இருப்பவரே கணவர்.. மறைமுகமாக திருமணத்தை அறிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா! - நடிகை ராஷ்மிகா மந்தனா

Actor Rashmika Mandhana: நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு கணவராக வேண்டுமென்றால் என்ன தகுதி வேண்டும் என்ற பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Actor Rashmika Mandhana
நடிகை ராஷ்மிகா மந்தனா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 11:19 AM IST

ஐதராபாத்: இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகின.

அதன் மூலம் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வந்தார். மேலும், நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் அனிமல் திரைப்படத்தில் நடித்தார்.

சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா யாரைத் திருமணம் செய்யப் போகின்றார் என ரசிகர்கள் பேசி வந்தனர். அந்த வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'ராஷ்மிகா மந்தனா டெல்லி பேன்ஸ்' என்ற பக்கத்திலிருந்து ஒரு பதிவு வெளியாகி உள்ளது.

அந்த பதிவில், "ராஷ்மிகா மந்தனாவுக்கு கணவராக வேண்டுமென்றால் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், அவள் இந்தியாவில் தேசிய அளவில் கவரக்கூடியவள் என்றும், அவளுடைய கணவர் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றும், அவளுடைய கணவர் வி.டியைப் போன்று இருக்க வேண்டும் அதாவது அதிக தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும், நாங்கள் அவளை ராணி என்று தான் அழைப்போம் அப்படியென்றால் அவளுடைய கணவர் ராஜாவைப் போல் இருக்க வேண்டும்" என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதனைப்பார்த்த ராஷ்மிகா மந்தனா இந்த பதிவிற்கு இது நிதர்சனமான உண்மை எனவும் அதனருகில் புன்னகைக்கும் எமோஜையும், காதலை வெளிப்படுத்தும் ஹார்ட் எமோஜையும் பதிவிட்டுள்ளார்". தற்போது ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் லிவ் இன் உறவில் இருப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்யப் போகிறார் எனவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது,"நாங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். அதனால் என்னுடைய வாழ்வில் நான் மேற்கொள்ளும் அனைத்து விசயங்களிலும் அவருடைய பங்கு இருக்கும் என்று கூறியிருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்: போலீஸ் உடையில் மிரட்டும் ரஜினிகாந்த்! ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details