தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் மோடி வெற்றி பெறுவரா? - ரஜினிகாந்த் பதில் என்ன? - Rajinikanth - RAJINIKANTH

Actor Rajinikanth: ஒரு வாரம் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், இந்தியா மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுவதுக்கும் ஆன்மீகம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த் புகைப்படம்
இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 2:29 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரா கால ஆன்மீக பயணமாக, இமயமலை புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "ஆன்மீக பயணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. என்னுடைய முதல் இமயமலை பயணத்தின் போது புது அனுபவம் கிடைத்ததால், ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குச் செல்கிறேன். இதில், ஒவ்வொரு வருடமும் ஒரு புது அனுபவம் இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆன்மீகம் தேவையாக உள்ளது. ஆன்மீகம் என்பது சாந்தி, சமாதானம், கடவுள் நம்பிக்கை என்றார். மேலும், ஆன்மீக பயணத்தால் புதிய இந்தியா பிறக்குமா? எனக் கேட்டதற்கு, நிச்சயம் வேண்டிக்கொள்கிறேன்" என தனது ஸ்டைலில் சிரித்துக் கொண்டே விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.

முன்னதாக, வீட்டில் இருந்து கிளம்பும்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். அங்கு பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன் என்றார். அப்பொழுது மீண்டும் மோடி வெற்றி பெறுவரா? என்று செய்தியாளர் கேள்விக்கு, அரசியல் தொடர்பான கேள்வி கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தார். இசை பெரிதா பாடல் வரிகள் பெரிதா என தமிழ் சினிமாவில் ஒரு போட்டி நிலவுகிறதே என்ற கேள்விக்கு, அண்ணா.. NO Comments எனத் தெரிவித்து கையெடுத்து கும்பிட்டார். மேலும், வேட்டையன் படத்தின் படபிடிப்பு குறித்த கேள்விக்கு, நன்றாக வந்துள்ளது" எனக் கூறி விமான நிலையம் கிளம்பிச் சென்றார்.

மேலும், ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, ஜூன் 3 அல்லது 4ஆம் தேதி சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

ஏஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்' (Vettaiyan) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதையடுத்து, ஓய்வுக்காகத் துபாய் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபாஸ் நடிக்கும் 'கல்கி2898 AD’ படத்திலிருந்து புஜ்ஜி வாகனம் சென்னையில் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details