சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ’குடும்பஸ்தன்’ திரைப்படம் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘குடும்பஸ்தன்’. நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த ராஜேஷ்வர் காளிசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். புதிய திருமணமான இளைஞர் தனது குடும்ப சூழலால் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம், குட் நைட், லவ்வர் ஆகிய திரைப்படஙக்ள் மூலம் பிரபலமடைந்த மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வைசாக் இசையமைத்துள்ள இப்படம் நாளை (ஜன.24) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று குடும்பஸ்தன் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், சமூக வலைதளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
குடும்பஸ்தன் படத்தின் இணையதள விமர்சனத்தில், “இந்த வருடத்தின் முதல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் குடும்பஸ்தன். இந்த படத்தின் கதையை எழுதிய பிரசன்னா பாலசந்திரன் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் நமக்கு இயல்பாக சிரிப்பை வரவைக்கிறது. அதேபோல் கிளைமாகஸ் காட்சியும் எமோஷனலாக உள்ளது.