சென்னை:இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் முதல் பாடலான பாரா என்ற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு ப்ரோமோ மூலம் நேற்று அறிவித்தது.
அதன்படி, பாரா என்ற முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது. “என் தாய் மண் மேல் ஆணை” என பாடலாசிரியர் பா.விஜய் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்திலிருந்து வெளியான இந்தியன் தாத்தா அறிமுக வீடியோவில் அனிருத் இசையமைத்த கம்பேக் இந்தியன் தீம் நல்ல வரவேற்பைப் பெற்றது.