தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"என்னுடைய படமும் பான் இந்தியா அளவில் வெளியிட ஆசைதான்" - நடிகர் ஜோஜூ ஜார்ஜ்! - ACTOR JOJU GEORGE

துல்கர் சல்மான் படங்கள் போன்று என்னுடைய படமும் பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அதற்கான வசதி என்னிடம் இல்லை என மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

'பணி' படக்குழுவினர்
'பணி' படக்குழுவினர் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 10:36 PM IST

சென்னை:நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள 'பணி' திரைப்படம் மலையாளத்தில் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் தமிழில் நவம்பர் 22 தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இதன் செய்தியாளர் சந்திப்பு வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை அபிநயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கூறுகையில்," 100 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'பணி'(Pani) மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை தமிழ் மக்களிடம் கொண்டு வந்துள்ளோம்.

தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். துல்கர் சல்மான் படங்கள் போன்று என்னுடைய படமும் பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்று ஆசை உள்ளது அதற்கான வசதி என்னிடம் இல்லை. வில்லன் என்றால் உருவத்தில் இல்லை குணத்தில் தான் இருக்கிறது அது என் கருத்து.

இதையும் படிங்க:'கங்குவா' திஷா பதானி குறித்த சர்ச்சை கருத்து; நேகா ஞானவேல்ராஜா விளக்கம்!

அதனால் தான் இந்த இரண்டு சிறுவர்களை வில்லனாக நடிக்க வைத்தேன். துணை நடிகர்கள் கதாநாயகி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். படம் எடுப்பதற்கு முன்பு நாங்கள் நடித்து பார்த்துக் கொள்வோம் அதனால் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. 6 நாட்களில் நடைபெறும் கதைதான் இந்த திரைப்படம் பொதுவாக ஒரு படத்துக்கு தேவையான கதையை உருவாக்கி படமாக எடுத்துள்ளோம்.

இந்த படத்தில் இயக்குநர் தான் வெற்றி பெற்றுள்ளார். நானே இயக்கி நானே நடித்துள்ளேன், இருப்பினும் இதில் இயக்குநர் தான் வெற்றி பெற்றுள்ளார் என்று நான் நினைப்பேன். தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களும் வைத்து இயக்க ஆசைப்படுகிறேன். தற்போது 'தக் லைஃப்' திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த படம் சிறப்பாக வந்துள்ளது என மணி ரத்னம் கூறினார். கார்த்திக் சுப்புராஜ் இந்த படம் நன்றாக வந்தது என்று கூறினார். அதேபோன்று இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடல் பணம் வாங்காமல் செய்து கொடுத்தார். இத்திரைப்படம் வெளியாவதற்கு உதவிய எல்லோருக்கும் நன்றி‌" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details