சென்னை: பிரபல நடிகர் ஜெயம் ரவி பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து, தற்போது முன்னனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர், சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார். இந்நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ள படம் 'பிரதர்'. இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் 'பிரதர் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன். இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.