சென்னை: பிரபல நடிகர் அஜித்குமார் சினிமா படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் பைக், கார் பந்தயம் மற்றும் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டுவார். சினிமா நடிகராவதற்கு முன் மெக்கானிக்காக இருந்த அஜித்திற்கு இயல்பாகவே பைக், கார் ஓட்டுவதில் ஆர்வம் அதிகரித்தது.
சமீபத்தில் கூட ’விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போது துபாய் கார் பந்தய ட்ராக்கில் கார் ரேஸிங்கில் ஈடுபட்டார். மேலும் ஏகே மோடோ ரைட் (AK Moto ride) என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 4500 கி.மீ தொடர் பைக் பயணத்தில் ஈடுபட்டார்.
தனியார் நிறுவனத்தின் சார்பாக குழுவாக இணைந்து பைக் பயணத்தில் ஈடுபட்ட போது, அஜித்குமார் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித், “மக்கள் அதிகமாக பயணம் செய்ய வேண்டும். பயணம் கல்வி போன்றது. மதம், சாதி ஆகியவை நீங்கள் சந்திக்காத மனிதர்களை வெறுக்க வைக்கும்.
நாம் சந்திக்காத மனிதர்களை பற்றி நாம் அதிகம் மதிப்பிடுவோம். ஆனால் நீங்கள் பயணம் செய்தால், வித்தியாசமான நாடுகளின் கலாச்சாரதை கடைபிடிக்கும் மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் மக்களை புரிந்து கொள்ள முடியும். உங்களை சுற்றி உள்ள நபரக்ளிடம் அனுதாபப்பட தொடங்குவீர்கள். அது உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் ரேஸர் அவதாரம் எடுக்கும் ஏகே... அஜித்தின் வியக்க வைக்கும் கார் மற்றும் பைக் கலெக்ஷன்! - Ajith Bikes and cars collections
அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐரோப்பிய கார் பந்தயத்தில் புதிய அணியுடன் களமிறங்குகிறார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்