சென்னை:தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையில் அஜித்தின் இயல்பான நடிப்பாலும், நிஜத்தில் அவரது எதார்த்தமான அறிவுரைக்காகவும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக எந்த திரைப்படமும் வெளியாகாமலிருந்த நிலையில், பெரும் எதிப்பார்க்கு மத்தியில் அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி 'விடாமுயற்சி' (Vidaamuyarchi) திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
வெளியான நாளிலிருந்து ‘விடாமுயற்சி’ படத்தின் வசூலும் பெரியளவில் இல்லை. படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 2 வாரங்களைக் கடந்த பின்னர்தான், 150 கோடி ரூபாய் அளவிற்கே வசூல் செய்தது. மேலும், இந்த படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றாலும், தொடர்ந்து திரையரங்குகளில் விடாமுயற்சி ஓடி வருவதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'குட் பேட் அக்லி' ரிலீஸ் எப்போ?
இந்நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷின் இசையில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மீண்டும் நடிகை த்ரிஷாவே நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது, 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சியளித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித்தின் பல கெட்டப்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இப்படத்திற்காக அஜித் எடை குறைத்துப் படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
அவரது புகைப்படங்கள் கடந்த சில நாட்களாகச் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வரும் நிலையில், அந்த புகைப்படங்களில் அஜித் அமர்க்களம் திரைப்பட நாட்களில் இருந்தது போல அழகாகவும், ஸ்லிம்மாகவும் உள்ளார் என ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களது கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ரம்யா கதாபத்திரத்தில் த்ரிஷா:
இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி அன்று குட் பேட் அக்லி ரிலீஸ்க்கு வர உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா என்பதை வெளியிடும் வீடியோ ஒன்றை படக்குழு நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:தொழிலாளர்களின் ஒரு குடியிருப்புக்கு 'விஜய் சேதுபதி டவர்' என பெயர் சூட்ட ஃபெப்சி முடிவு!
நடிகர் அஜித்தின் திரைப்பயணம் ஒருபுறம் இருக்க, அவரது கார் பந்தயம் முனைப்பு அனைவரையும் அவருக்கு ரசிகராக வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் அவர் துபாயில் நடைபெறும் கார்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றுப் போட்டியில் அவரது அணி 3-வது இடத்தை பிடித்து அசத்திய நிலையில், அடுத்தகட்ட போட்டிக்காக அஜித், பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று அந்த பயிற்சியின் போது கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜீத்:
தற்போது, ரேஸில் நடத்த விபத்து குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்பெயினின் வலென்சியாவில் நடந்த 5வது சுற்றுப்பந்தயம் நல்லபடியாக நடந்து முடிந்தது. அதில் பாராட்டுக்குரிய வகையில் 14வது இடத்தைப் பிடித்தார். ஆனால், நேற்று நடைபெற்ற 6வது சுற்று துரதிர்ஷ்டவசமாக அமைந்தது. பந்தயத்தின் நடுவே அஜித்தின் கார் 2 முறை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித்தின் மீது எந்த தவறும் இல்லை என இணைப்பு சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், கார் முதன்முறையாக விபத்துக்குள்ளான போது சேதமடையவில்லை. ஆனால், இரண்டாவது முறை கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. ஆனால், அவரது விடாமுயற்சியின் காரணமாகப் பந்தயத்தைத் தொடர்ந்து முடித்தார். அந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. அவருக்கு அக்கறை மற்றும் பிரார்த்தனைகள் செய்த அனைவருக்கும் நன்றி. அஜித்குமார் தற்போது நலமுடன் உள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.