தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"விவாகரத்து குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.." - ஜெயம் ரவி மீது ஆர்த்தி ரவி குற்றச்சாட்டு! - jayam Ravi and Aarti divorce issue - JAYAM RAVI AND AARTI DIVORCE ISSUE

ஜெயம் ரவி வெளியிட்ட விவகாரத்து செய்தி என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று எனவும், இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி, ஆர்த்தி ரவி அறிக்கை
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி, ஆர்த்தி ரவி அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 11, 2024, 11:07 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக சமீபத்தில் அறிவித்துள்ள சம்பவம் திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிரபல இயக்குநர் மோகன் ராஜா சகோதரரான ஜெயம் ரவிக்கும், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகளான ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களது மூத்த மகன் ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்திருந்தார். தற்போது, இவர் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனம் விட்டுப் பேச வாய்ப்புகள் மறுப்பு:விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையைப் பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டுப் பேச, என் கணவரைச் சந்திக்க வேண்டும் நான் சமீபகாலமாகப் பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: "கணவராக 100 மார்க் மேல் தருவேன்"- வைரலாகும் ஆரத்தியின் வீடியோ!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: திருமணப் பந்தத்திலிருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன்.

ஆனால், என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளைக் காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.

தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்குத் தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.

இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாகக் காத்து நிற்கும். இந்த சோதனையிலிருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details