ஹைதராபாத்:நடிகர்கள் அமீர்கான், கிரண் ராவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல். மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான இப்படம் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பபிதா போகட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுஹானி பட்னாகர் தனது 19 வயதில் உயிரிழந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சுஹானி கடந்த சில காலங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுஹானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கல் படத்தைத் தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சுஹானி வேறு படங்களில் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு பாலிவுட் திரை பிரபலங்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.