சென்னை:இந்திய தொழில்நுட்பக் கழகம் 2024 ஆம் ஆண்டில் பல்வேறு வரலாற்று சாதனைகளை செய்துள்ளது. அதில் குறிப்பாக, உலக பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது, விளையாட்டு வீரர்களுக்கு முதல் முறையாக தனியாக இட ஒதுக்கீட்டினை வழங்கியது என கூறிக் கொண்டே போகலாம். இந்த நிலையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நடப்பு ஆண்டில் சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் சாதனைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் கல்வித் தேடல்களில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி ஆய்வக ஆராய்ச்சியை, பயன்பாடுகளுக்கு உகந்த தயாரிப்புகளாக மாற்றுவதிலும் முன்னோடியாக இருந்து வருகிறது.
இந்தியக் கல்வி தரவரிசையில் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
2024 - சென்னை ஐஐடியின் சாதனைகளை விளக்கும் இயக்குநர் காமகோடி (Credits - ETV Bharat Tamilnadu) 2016-ல் தரவரிசை தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை தொடர்ச்சியாக 9-வது ஆண்டாக
‘பொறியியல்’ பிரிவிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் (QS World University Rankings – QS WUR) கடந்த ஆண்டு 285-வது இடத்தில் இருந்த இக்கல்வி நிறுவனம், ‘QS WUR 2025’-ல் 227-வது இடத்திற்கு தனது நிலையை மேம்படுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு:
நாட்டிலுள்ள ஐஐடி-க்களில் முதன்முறையாக சென்னை ஐஐடி, 2024-25ம் கல்வியாண்டு முதல் ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையை (Sports Excellence Admission - SEA) அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, ஒவ்வொரு இளங்கலைப் பாடத்திட்டத்திலும் இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மாணவிகளும் இடம் பெறுவர்.
நுண்கலையில் மாணவர் சேர்க்கை(FACE )
கலை மற்றும் கலச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘நுண்கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (Fine Arts and Culture Department) சிறந்து விளங்குவோருக்கு’ (Fine Arts and Culture Excellence Admission - FACE) 2025-26ஆம் கல்வியாண்டு முதல் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி, அனைத்து பிடெக் (B.Tech) மற்றும் பிஎஸ்சி (B.Sc) பாடத்திட்டங்களிலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், மாணவிகளுக்கு ஓரிடமும், இருபாலினருக்கு பொதுவானதாக மற்றொரு இடமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி வளாகத்தை பார்வையிட மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அழைப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?
சென்னை ஐஐடியில் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை தொழிலாக உருவாக்குவதற்கு தொழில்முனைவோர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், “ 2025-ஆம் ஆண்டு நிறைய எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் கொண்டிருக்கும். இதில், 100 ‘ஸ்டார்ட் அப்’களுக்கு தொழில் ஊக்குவிப்பு அளிக்கும் ‘ஸ்டார்ட் அப் சதம்’ (Start-up century) என்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதுகிறோம்.
IInventiv-2025 கண்காட்சி:
பான் - ஐஐடி, என்ஐடி, தேசிய கல்விநிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் (NIRF) முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டு ‘IInventiv-2025’ எனப்படும் கண்டுபிடிப்புக் கண்காட்சியை நடத்தவிருக்கிறோம். இடைநிலை ஆராய்ச்சி, இடைநிலைத் திறனுக்கான தேவை அதிகரித்து வருவதால், இடைநிலைக் கல்விக்கான பள்ளியையும், நிலைத்தன்மைக்கான பள்ளியையும் தொடங்கியுள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப்கள் (Startup), தொழில்ஊக்குவிப்பு திட்டம் (Incubation Program), தொழில்நுட்ப வணிக
ஊக்குவிப்பு (Technology Business Incubator) போன்ற முன்முயற்சிகள் மூலம், ஐஐடி மெட்ராஸ்
மாணவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தை வளர்த்து வருகிறது. அத்துடன், 233 ஸ்டார்ட்அப்களுக்கு
ஆதரவு அளித்து வருகிறது.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:
- கல்வி, ஆராய்ச்சி மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பிற்காக சென்னை ஐஐடிக்கு, CNBC-TV18 விருது வழங்கி (CNBC-TV18 India Business Leader Awards 2024 (IBLA2024) அங்கீகரித்துள்ளது.
- இந்திய தொழில் கூட்டமைப்பு தொழில்துறை அறிவுசார் சொத்துரிமைக்கான விருதை (CII Industrial IP Award 2024) விருதைப் பெற்றுள்ளது.
- 2024-ஆம் ஆண்டுக்கான ‘ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார்: விக்யான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர்’ (Rashtriya Vigyan Puraskar - VY-SSB) விருதை, சென்னை ஐஐடியை சேர்ந்த இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் பிரபு ராஜகோபால், மின்சாரப் பொறியியல் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ண காந்தி ஆகிய இரண்டு பேராசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இவர்கள் ஆற்றிய சிறந்த பணிகளைப் பாராட்டி ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர்’ (Shanti Swarup Bhatnagar) விருது
வழங்கப்பட்டுள்ளது. - சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பில் உருவான ஸ்டார்ட்-யு (Start-U) நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் (AgniKul Cosmos) 30 மே 2024 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3டி பிரிண்டட் இன்ஜினுடன்(3D printed engine) கூடிய உலகின் முதலாவது ராக்கெட்டை ஏவியது.
- அக்னிபான் - சார்ட்டட் (Agnibaan- SOrTeD) சப்ஆர்டியல் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்(Sub-Oriental Technology Demonstrator), அக்னிகுல் நிறுவிய ‘தனுஷ்’ எனப்படும் இந்தியாவின் முதலாவது தனியார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது இந்தியாவின் முதலாவது
செமி-கிரையோஜெனிக் என்ஜின்(Semi-cryogenic engine) மூலம் இயங்கும் ராக்கெட் ஏவுதலாகும். - மனிதக்கரு மூளையின் மிக விரிவான 3D உயர்-தெளிவு படங்களை வெளியிட்ட உலகின் முதல்
ஆராய்ச்சி நிறுவனமாக திகழ்கிறது. - தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான மைண்ட்கிரோவ்(Mindgrove), இந்தியாவின் முதல் வணிகரீதியான உயர் செயல்திறன் கொண்ட RISC-V அடிப்படையிலான சிப் (SoC) சிஸ்டத்தை ‘Secure IoT’ என்று வடிவமைத்து, தயாரித்து தொடங்கியுள்ளது.
முன்னாள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவனங்களால் வழங்கப்பட்ட நிதி
2023-24 ஆம் ஆண்டில், முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து ரூ.513 கோடியைத் சென்னை ஐஐடி திரட்டியுள்ளது. இது சென்னை ஐஐடி வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச தொகையாகும். சென்னை ஐஐடி வரலாற்றில் மிகப்பெரிய நன்கொடைத் தொகையாக ரூ. 228 கோடியை, சிறந்த முன்னாள் மாணவர் விருது பெற்ற கிருஷ்ணா சிவுகுலா (MTech, 1970) வழங்கியுள்ளார்.
இந்தியாவில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு இதுவரை அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடைகளில்
இந்த நன்கொடையும் ஒன்றாகும். சர்வதேச மாணவர்கள், சென்னை ஐஐடியில் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி சிறப்பு மானியத் திட்டம், புதிய மாணவர்களுக்கான யுஜி பெல்லோஷிப் திட்டம்(UG Fellowship Program), ஸ்போர்ட்ஸ் ஸ்காலர் ப்ரோக்ராம்(Sports Scholar Program), சாஸ்த்ரா இதழ் மேம்பாடு மற்றும் கிருஷ்ணா சிவுகுலா பிளாக் (Krishna Chivukula Block)பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், சென்னை ஐஐடியின் சிறந்த முன்னாள் மாணவரும், IGATE-ன் இணை நிறுவனருமான
சுனில் வாத்வானி, ரூ. 110 கோடி செலவில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளியை (School of Data Science and Artificial Intelligence) அமைப்பதற்கான அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். வாத்வானி அளித்த நன்கொடை, இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் பள்ளியை உருவாக்க வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும்.