தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஏற்ற இறக்கத்திற்கு காரணம் என்ன? - Gold and silver price today

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை(Gold Rate) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையாகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 11:04 AM IST

சென்னை: மத்திய பட்ஜெட்டில் இறங்குமதி வரி குறைப்புக்கு பிறகு சரிவை சந்தித்த தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஏறுமுகத்தை கண்டது.

உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, இஸ்ரேல் - லெபனான் போர் பதற்றம் உள்ளிட்ட அசாதாரண சூழல் காரணங்களால் தங்கம் விலை பெரும் மாற்றத்தை கண்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதத்தில் சுமார் ரூ.3,000 உயர்வு: சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி கிராம் ரூ.6695-க்கு விற்பனை செய்யப்பட்ட 22 கேரட் தங்கமானது செப்டம்பர் 30-ஆம் தேதியான இன்று காலை நேர வர்த்தகப்படி ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:புத்தாண்டு வரை தேங்காய் விலை உச்சம் தான்.. ஏன்? எப்போது விலை குறையும்?

தங்கத்தை பொருத்தவரையில் ஒரு கிராமுக்கு 385 ரூபாயும், சவரனுக்கு 3,080 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. இதில், கடந்த 27-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவில் உட்சபட்சமாக கிராம் ரூ.7,100-க்கு விற்பனையானது. ஆனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை கண்டுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொருத்தவரையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றபோதிலும், கடந்த 10 நாட்களாக ஏற்றத்தை சந்தித்துள்ளது. உதாரணமாக செப்.1-ஆம் தேதி கிராம் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளியானது இன்று கிராம் ஒன்று 101 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 1000 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details